தமிழர் தாயகங்களில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இன்று(15) உணர்வெழுச்சியுடன் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
39ஆவது ஆண்டு நினைவேந்தல்
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் உறுப்பினர் மகாதேவா குணசிங்கராவினால் தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களால் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தியாகி திலீபனின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது
நாமல் ராஜபக்சவிற்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் நிமல் பெரேராவை ஏன் கைது செய்யவில்லை! சாகர காரியவசம்
ஷானி அபேசேகர - ரவி செனவிரத்ன ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்! இழப்பீடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் மாநகர் சபையின் மதாந்த அமர்வு ஆரம்பமாக முன்னர் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது
மேலதிக தகவல் - தீபன்











