அநுரவை அவசரமாக அழைத்த ஷிரந்தி! மகிந்தவின் மாளிகையில் திடுக்கிடும் சம்பவம்
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே நாமல் ராஜபக்ச விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...