கொழும்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - வெளிநாட்டு பெண்கள் கைது
கொழும்பு, குறுந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகளுக்காக நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 11 பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்கள் 22 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுட்பமான நடவடிக்கை
சுற்றிவளைப்பின் போது குறித்த இடத்தின் உரிமையாளர் அங்கிருந்த தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த விசேட தகவலுக்கமைய நபர் ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான நடவடிக்கையின் பின்னரே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது, ஒரு மாத கால விசா அனுமதியுடன் நாட்டுக்கு வந்துள்ள சந்தேக நபர்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாவை வருமானமாக பெற்றுள்ளனர்.

ஒரு பெண்ணிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 20,000 முதல் 30,000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 11 தாய்லாந்து நாட்டுப் பெண்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam