குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
துரோகத்தில் சிக்கிய கோட்டாபய
அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.
ராஜபக்சவின் அரசியல்
இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri