இந்தோனேசிய கப்பல் விபத்தில் 129 பேரைக் காணவில்லை - தேடுதல் பணிகள் தீவிரம்
இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
சுராபாயா நகரிலிருந்து போர்னியோ தீவின் பஞ்சார்மாசின் துறைமுக நகரை நோக்கிப் பயணித்த 'வர்ஜோ ட்ரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில்
இதுவரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் போது 108 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் 600இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் 12 கப்பல்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சவால்கள் நிலவுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.