நுவரெலியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(15.01.2026) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri