மின் கட்டண அதிகரிப்பிற்கு சிவப்புக் கொடி காட்டிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சிவப்புக் கொடி காட்டியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் மின்கட்டணத்தை 11.57 வீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை அண்மையில் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.
ஒப்புதல் வழங்க மறுப்பு
எனினும் குறித்த பிரேரணை உரிய காலப்பகுதிக்குள் முன்வைக்கப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான ஒப்புதல் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவு ஒன்றை முன்னதாகவே சமர்ப்பிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான மின்சார சபையின் தீர்மானம் எதிர்க்கட்சி மற்றும் சிவில் அமைப்புகளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam