இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம்: நாமல் ராஜபக்ச இரங்கல்
விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இரங்கலை குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அஹ்மதிநிஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.அவர் இலங்கையின் உண்மையான நண்பர்.
அபிவிருத்தித் திட்டம்
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அஹ்மதிநிஜாத் இலங்கைக்கு வருகை தந்ததை நாமல் நினைவு கூர்ந்துள்ளார்.

அந்தப் பயணத்தின் போது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தரம் உயர்த்துதல், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய திட்டங்களைச் செயல்படுத்த அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
வருத்தப்பட வைப்போம் - தீவிரமாக தயாராகும் ஈரான்! ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு பதிவு
இரங்கல்
இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் நாட்டு மக்களுடன் இலங்கை என்றும் துணை நிற்கும் என்று கூறியுள்ள நாமல், போர் பாதையைத் தவிர்த்து அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam