வருத்தப்பட வைப்போம் - தீவிரமாக தயாராகும் ஈரான்! ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு பதிவு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி ஒரு எச்சரிக்கை பதிவை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், "அமெரிக்காவைப் போலல்லாமல், ஈரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.
கடந்த 300 ஆண்டுகளைப் போலவே, ஈரான் இந்தப் போரைத் தொடங்கவில்லை.
பாதுகாப்போம்..
மேலும் நமது துணிச்சலான ஆயுதப் படைகள் தற்காப்பைத் தவிர வேறு எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.

செலவுகளைப் பொருட்படுத்தாமல், நம்மையும் நமது ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகத்தையும் நாங்கள் கடுமையாகப் பாதுகாப்போம்.
மேலும் எதிரிகளை அவர்களின் தவறான கணக்கீட்டிற்காக வருத்தப்பட வைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
Iran, unlike the United States, has prepared itself for a long war. pic.twitter.com/0nTGu9u2K4
— Ali Larijani | علی لاریجانی (@alilarijani_ir) March 2, 2026