இலங்கை சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடித்த கலவரம்! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை
இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறை உட்பட ஐந்து சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரங்கள் காரணமாக ரூ. 255 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறைகளில் வெடித்த கலவரம்
இதற்கமைய, சட்டத்துறையில் தாமதங்களை தவிர்ப்பதற்காக, 2007ஆம் ஆண்டின் புனர்வாழ்வுச் சட்டத் திருத்த மசோதா எண் 54-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறும், ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி அச்செயல்முறையை விரைவுபடுத்துமாறும் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு, மஹர, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் வெடித்த கலவரத்தில் பத்து சிறை அதிகாரிகளும் 25 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, மேலும் 100 க்கும் மேற்பட்ட கைதிகளும் சிறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.