சிறைச்சாலைக்கு வரிசைகட்டும் பலர்..! மக்களை ஏமாற்ற திட்டபோடும் தரப்பினருக்கு சவாலாக மாறும் அனோஜனின் தீர்ப்பு
அனோஜனுக்காக குரல் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் மக்களை ஏமாற்ற ஒரு சாரார் திட்டம் போடுகிறார்கள். ஆனால் மக்கள் ஏற்கனவே அனைத்தையும் அறிந்திருக்கிறார்கள். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது என எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அநுர குமார திஸாநாயக்க கூறிய வாக்குறுதிகளைத்தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவேன் என்று கூறினார். மாறாக, ஆட்சிக்கு வந்து இரண்டு வருட காலத்தில் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று அவர் கூறவில்லை.
அனோஜனுக்காக குரல் கொடுப்போம் என சிலர் கலவரத்தைத் தூண்டுவதற்கான வேலைப்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, நல்ல ஆரோக்கியத்துடன் அனோஜன் வீடு திரும்ப வேண்டும் என அனைத்து மக்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சவூதி தூதரகம் வாயிலாக சவூதிக்கு அனைத்து தகவல்களும் பரிமாற்றப்படும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் சிறைக்குச் செல்ல வேண்டியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இனிவரும் நாட்களில் அதனை நாம் எதிர்பார்க்கலாம் என்றார்.