ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது..! லசந்தவை கொன்றவர்கள் தொடர்பில் வாய் திறந்த ரங்க திசாநாயக்க
இலங்கையின் புகழ்பெற்ற ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான லசந்த விக்ரமதுங்க, சில அரசியல்வாதிகளின் சதியின் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ரங்க திசாநாயக்க லசந்த விக்ரமதுங்கவின் நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
மேலும், லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், அந்தச் சம்பவம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கோட்டாபய ராஜபக்சவினால் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை விமானப்படைக்கான MiG-27 போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தவர்களில் லசந்தவும் ஒருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஷிரந்தி ராஜபக்சவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணைகளுக்காக அவர் சிங்கப்பூர் சென்ற பின்னர், அங்கிருந்து நாடு திரும்பாமல் இருக்கிறார். அதேசமயம், அவர் சிங்கப்பூரில் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அநீதிகளை வெளிக்கொண்டு வர முயன்ற பலர் கொல்லப்பட்ட நிலையில், அந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்ற கேள்விக்கே பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது.
இதற்குக் காரணமாக, முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் கவனத்தை ஈர்க்கின்றன. இவ்வாறான பல அரசியல் சூழ்ச்சிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கேள்விகளை இன்னும் ஆழமாக ஆராய்கின்றது இன்றைய “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சி,
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri