அநுர அரசை வீழ்த்த ராஜபக்சக்களின் புதிய வியூகம் : இலக்காகும் யாழ்ப்பாண வல்லிபுர ஆழ்வார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்று இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டிலே இனவாதம், மதவாதம் என்பவற்றுக்கு இடம்கொடுக்கவில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் மறுபுறம் இனங்களுக்கிடையில் மதங்களிற்கு இடையில் மோதலை உருவாக்குவதற்காள செயற்பாடுகள் கச்சிதமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அநுர அரசு அது தொடர்பில் கவனக்குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்தவகையில் ஈழத்தமிழர்களுடைய முக்கிய வழிபாட்டுத்தலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் பற்றிய ஒரு கருத்து சமூக ஊடகத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அதாவது குறித்த ஆலயத்தில் தேர்த்திருவிழா இடம்பெற்ற புகைப்படத்தை பகிர்ந்து அந்த புகைப்படத்தின் கீழே ஒரு குண்டு போதும் இந்த பிரச்சினையை முடித்து விடும் என்று சொல்லி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதே விடயத்தை ஒரு தமிழ் இளைஞன் வேறு ஒரு பகுதியை நோக்கி இவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அதன் விளைவு எவ்வாறாக அமைந்திருக்கும்? இவ்வாறான பதிவுகள் ஏன் இடம்பெறுகின்றன? அதற்கான அவசியம் என்ன? என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!