இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை!இறுதி ஈழப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது....
இறுதி ஈழப் போர் முடிந்ததோடு இலங்கை இராணுவத்திற்காக சீனா கொண்டு வந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் எஞ்சியிருந்தன. அதற்குப் பிறகு, இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதோ அல்லது அகற்றுவதோ சரியாக நடக்கவில்லை.
இறுதியில் சீன அரசு, "உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள், இனி எங்களிடம் கேட்க வேண்டாம்" என்று கூறிவிட்டது. அதன் பிறகு சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய பணமும் செலுத்தப்பட்டது.
ஆனால் வெடிமருந்துகள் கொழும்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த அரசாங்க காலங்களில் இவற்றை மோசடியாக வெளிநாடுகளுக்கு விற்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தடைப்பட்டதோடு சில வெடிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புலனாய்வு தகவல்களில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்...இலங்கையில் இப்போது மலாவி (Malawi) நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை விற்கும் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று வருகிறது.
மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரம் - ஜனாதிபதி தேர்தலில் பாரிய மோசடி - நள்ளிரவில் சிறை பிடிக்கப்பட்ட ஆணையாளர்
யுத்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள்
இந்த கதை பல வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது. யுத்த காலத்தில் 'பொலி டெக்னொலஜிஸ்' (Poly Technologies) என்ற சீன நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஆயுதங்கள் வாங்கப்பட்டன.
குறிப்பாக வெடிமருந்துகள் (Ammunition) கோடிக்கணக்கில் தேவைப்பட்டன. இந்த 'பொலி டெக்னொலஜிஸ்' என்பது சீன அரசின் ஒரு நிறுவனமாகும்.
அந்த நிறுவனம் பெருமளவிலான வெடிமருந்துகளை இலங்கைக்குள் கொண்டுவந்து சேமித்து வைத்திருந்தது. பீரங்கி வெடிமருந்துகள் (Artillery ammo) மில்லியன் கணக்கில் தேவைப்படும் போது, அவர்களிடம் இருக்கும் பாரிய சேமிப்பிலிருந்து கொடுக்கப்பட்டது.

அதற்குரிய பணத்தை இலங்கை அரசு செலுத்தும். மீண்டும் ஒரு பாரிய சேமிப்பு அந்தப் நிறுவனத்திடம் எஞ்சியிருக்கும்.அந்தப் பொருட்கள் இலங்கையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தன.சீனாவில் இருந்து உடனுக்கு உடன் இறக்குமதி செய்யப்படுவதில்லை.
தேவைப்படும் போது வழங்க ஆயத்தமாக இருந்தது. கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னும் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் இதை விற்க முயன்றார்கள்.
இந்த ஆயுதங்களை ஒரு போர்ச் சூழல் உள்ள நாட்டுக்கே விற்க முடியும்? போரை எதிர்பார்க்கும் ஒரு நாட்டுக்குத்தான் விற்க முடியும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு அனுப்ப முயன்றார்கள்.
இது தெரியவந்ததும் ரஷ்யா தலையிட்டு, தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு மத்திய கிழக்கு ஹூதிகளுக்கு (Houthis) விற்க முயன்றார்கள். அமெரிக்கா இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்தியது.
ஆனால் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி இறுதிப் பயனர் சான்றிதழ்களை (EUC) தயாரித்து மோசடி செய்தார்கள்.
ஆயுத விற்பனை
ஏனெனில், ஆயுதக் கொடுக்கல் வாங்கலை எவராலும் நினைத்தபடி செய்ய முடியாது. பணம் இருக்கிறது என்பதற்காக வாங்க முடியாது.
அதற்குத் தனிதன்மையான கொடுக்கல் வாங்கல் தேவை. "உங்களிடம் வாங்கும் ஆயுதங்களை உங்களுக்கு எதிராகவும், அல்லது உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பயன்படுத்த மாட்டோம்" என்ற சான்றிதழை வழங்க வேண்டும்.
போலி (EUC) சான்றிதழ்களைத் தயாரித்து விற்கும் இந்த முயற்சி கமல் குணரத்னவின் காலத்தில் மூன்று முறை நடந்துள்ளது. இப்போது மலாவிக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை (Cabinet) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலாவி என்ற நாட்டில் முறையான இராணுவம் கூட இல்லை. இராணுவத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஓய்வுபெற்றவர்கள். அதிலும் பாதிப் பேர் தீவிரமாக இயங்குவதில்லை.
இது முறையாக நடப்பதாக இருந்தால், மலாவிக்கான தூதரகம் இல்லை, நைரோபியில் தான் உள்ளது. நைரோபியில் உள்ள தூதரக அதிகாரியின் இராஜதந்திர ஆவணத்தில் மலாவி பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் (EUC) சான்றிதழை இலங்கை ஜனாதிபதிக்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கோ அனுப்ப வேண்டும்.
ஆனால் அரசாங்கத்திற்கு தெரியாது.மலாவியில் இவ்வளவு பாரிய பீரங்கி வெடிமருந்துகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை.மலாவியிலிருந்து இது வேறு எங்கோ கைமாற்றப்படுகிறது.இதற்கு பின்னால்'குமார ராஜபக்ஷ' என்ற, யுத்த காலம் முழுதும் சம்பாதித்த ஒரு முகவர் தான் செயற்பட்டு வருகிறார்.
ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan