ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..
இலங்கை விமானப்படையில் இருக்கும் MI-171 உலங்குவானூர்திகளில் (Helicopter) VIP பயன்பாட்டிற்காக அதாவது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணிக்கும் உலங்குவானூர்தியின் பறக்கும் காலம் (Flying Hours) அனைத்தும் முடிந்துவிட்டன (Expired).
அதாவது அதன் பறக்கவிடக்கூடிய அனுமதித்த கால எல்லைகள் அனைத்தும் தாண்டிவிட்டன இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என புலனாய்வு பத்திரிகையாளர் இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு:மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....
பைலட்கள் 'ஐஸ் போதைப் பாவனை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்குக் கூட தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார பயணம் செய்த உலங்குவானூர்தி பைலட்கள் 'ஐஸ் போதைப்பொருள் பாவித்திருந்ததை நான்தான் கூறினேன்.
அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து விமானப்படைத் தளபதி நேரடியாக வந்து அந்தச் செய்தி உண்மை என்று ஒப்புக்கொண்டார். இலங்கையில் மொத்தம் 22 MI-171 உலங்குவானூர்திகள் உள்ளன.

அவற்றில் தற்போது இயக்கத்தில் இருப்பது மூன்றே மூன்று மட்டும்தான். மீதமுள்ள 19 உலங்குவானூர்திகளும் பழுதடைந்துள்ளன. அந்த மூன்றில் ஒன்று VIP பயன்பாட்டிற்கானது. மற்றொன்று ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னொன்று விமானப்படையால் பயன்படுத்தப்படுகிறது. ஆக மொத்தம் மூன்றே மூன்று மட்டும்தான் இயங்குகின்றன. இயக்கத்திலிருக்கும் அந்த மூன்றிலும் பறக்கவிடக்கூடிய அனுமதித்த கால எல்லைகள் அனைத்தும் தாண்டிவிட்டன. இதற்கு ஒரு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் அப்படி ஒரு கால நீடிப்பை வழங்கும் தொழில்நுட்ப வசதி எம்மிடம் இல்லை. டித்வாவில் விபத்துக்குள்ளானது அவ்வாறு ஒன்று தான். இவற்றை பழுதுபார்ப்பதற்காகஇ சமீபத்தில் துய்ய கொந்தா (பாதுகாப்புச் செயலாளர்) ரஷ்யாவிற்குச் சென்று அவமானப்பட்டு திரும்பி வந்துள்ளார்.
ரஷ்யாவில் துய்ய கொந்தாவுக்கு ஏற்பட்ட அவமானம்
ஏனெனில் இந்த MI-171 உலங்குவானூர்திகளை பழுதுபார்ப்பதற்கு கமல் குணரத்னவின் காலத்தில் 'Winsley Defense Group' ' என்ற நிறுவனத்திற்கு இதைக் கொடுத்துள்ளார்கள். இதில் நான்கு மட்டுமே பழுதுபார்ப்பதற்காக ஜோர்ஜியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ரஷ்யாவின் எதிரி நாடு. யுத்த காலத்தில் இந்த MI-171 உலங்குவானூர்திகளை ரஷ்யாவே வழங்கியது. அதன்பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் துய்ய கொந்தா ரஷ்யாவிற்கு ஒரு மாநாட்டிற்காகச் சென்றார்.
அங்கே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். அப்போது ரஷ்ய தரப்பினர் துய்ய கொந்தாவின் சட்டையைக் பிடிக்காத குறையாகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். அங்கிருந்தபடியே தொலைபேசி அழைப்பில் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ளார்.
கமல் குணரத்ன போன்றவர்கள் முழு நாட்டையுமே ஒரு சர்வதேசப் பிரச்சினையில் மாட்டிவிட்டார்கள். இவர்கள் பாருடன் இருந்தார்கள் என்று பார்க்க வேண்டும். இந்த விடயங்கள் எதுவும் ஜனாதிபதிக்கு தெரியாது. பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களுக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாரத்தில் இல்லாத 'நிழல் அரசு' இன்னமும் மிகவும் சக்திவாய்ந்ததாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோட்டாபயவால் பதவி பறிக்கப்பட்ட அதிகாரியைக் கொண்டே காய் நகர்த்தும் அநுர தரப்பு! பல சூழ்ச்சிகள் அம்பலம்