நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, நேற்று(15) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தாம் பெற்ற நோபல் பரிசு பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கியதாக, மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் சந்திப்பு
வெனிசுலா மக்களின் விடுதலைக்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறினார்.

வெனிசுலாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, மச்சாடோவை "துணிச்சலான பெண்" என்று பாராட்டிய போதிலும், தற்போதைய நிலையில் வெனிசுலாவை வழிநடத்த அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று ட்ரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri