இலக்கை நெருங்கிய வல்லரசுகள்! ஈரானின் முக்கிய அணுசக்தி தளம் தரைமட்டமென தகவல்
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நடான்ஸில் உள்ள ஈரானின் பரந்த அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடான்ஸ் அணுசக்தி நிலையம்
இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது நடான்ஸில் உள்ள பரந்த அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிற்கான ஈரானின் தூதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "மீண்டும் அவர்கள் நேற்று ஈரானின் அமைதியான, பாதுகாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களைத் தாக்கினர்" என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் 35 நாடுகளின் ஆளுநர்கள் குழுவின் கூட்டத்தில் ரெசா நஜாபி செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam