நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளில் ஈடுபட்ட அநுர
புதிய இணைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று(16) சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு உலங்குவானூர்தியில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு, விகாராதிபதியின் காலில் விழுந்தும் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.


மேலதிக தகவல்-ராகேஸ்
முதலாம் இணைப்பு
நயினாதீவு விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
நயினாதீவு விகாராதிபதி
குறித்த சந்திப்பானது இன்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றைய தினம் ஜனாதிபதி விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன் , தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று , பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan