இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட டுபாயில் கைதான பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மூவர்
புதிய இணைப்பு
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.




முதலாம் இணைப்பு
பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான “சூட்டி மல்லி“ என்பவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் கைது
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “புன்சா” என்பவரின் சகாவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மோசடி குற்றச்சாட்டுகயுளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் இலங்கைக்கு அழைத்துவருவதாற்காக இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பெர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri