வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா இன்று..! பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று(25.09.2026) இடம்பெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் திருவிழாக்களின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா காலை 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை(26.09.2026) பிற்பகல் 4 மணியளவில் கற்கோவளம் வங்கக்கடலில் வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
நாளைமறுதினம்(27.09.2026) காலை 10 மணிக்கு இடம்பெறும் பட்டுத் தீர்த்தத்துடன் இந்த ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.
பக்தர்களின் கவனத்திற்கு..
தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதி கருதி, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர் வசதிகள் மற்றும் அன்னதான மடங்களில் விசேட அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, வடபிராந்திய பருத்தித்துறை டிப்போ மற்றும் வடமராட்சி சிற்றூர்தி சேவைச் சங்கம் ஆகியவை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு விசேட பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.
மேலும், இந்த ஆலய உற்சவ காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் அந்தப் பகுதியில் விசேட ஒரு வழிப் போக்குவரத்துச் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam