கையடக்கத் தொலைபேசியால் வெடித்த தகராறு - பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயார்
மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் கணவனின் தாயாரை சந்திக்கச் சென்ற மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (24.09.2026) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
31 வயதுடைய மனைவி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான வாசன் என்பவர் தங்கராசா பிரதீபா என்ற பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.
இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் மகனும், மகளும் இருக்கிறார்கள்.

கூலித் தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார்.
கையடக்க தொலைபேசியால் வந்த தகராறு
இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று மனைவியின் கையடக்கத் தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து பணத்தை எடுத்து, அதற்கு மதுபானம் வாங்கிக் குடித்துவிட்டு வீடு வந்துள்ளார்.
இதையடுத்து, கணவன் மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில், மனைவி வீட்டிலிருந்து வெளியேறி, சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனைப் பற்றி முறையிடுவதற்கு அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, மனைவியைப் பின்தொடர்ந்து சென்ற கணவர், தனது தாயார் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார்
இதையடுத்து, பொலிஸ் அவசர சேவை 119க்கு அறிவித்துள்ளனர்.
மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த நபர் கடந்த மாதம் 24ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன், மது போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதவானின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam