மலையக மக்களுக்காக குரல் கொடுத்த மு. சிவலிங்கம் காலமானார்
மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் நேற்று(24.09.2026) காலமானார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றிய மு. சிவலிங்கம் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கும் சொந்தக்காரராக பார்க்கப்படுகின்றார்.

அவரது “ஒப்பாரி கோச்சி” சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாகவே இன்று வரை பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், மு. சிவலிங்கத்தின் மறைவு, மலையக சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam