இஸ்ரேல் போரால் காசா பகுதியில் சுமார் 92 சதவீத பொருளாதார நிறுவனங்கள் பாதிப்பு
இஸ்ரேலின் போரினால் காசா பகுதியில் சுமார் 92 சதவீத பொருளாதார நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் சபை (UNCTAD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் வங்கித்துறை
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், காசா பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு சுமார் 71.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி முழுவதும் நிலவும் "கடுமையான வீழ்ச்சியை" சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களால் அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகள், பொது நிதி மற்றும் வங்கித்துறை ஆகியவை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரித்துள்ளது.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam