எரிசக்தி சுதந்திரத்தைப் பறிக்கவே ஐரோப்பிய ஒன்றியம்! அமெரிக்க துணை ஜனாதிபதி குற்றச்சாட்டு
ஹங்கேரி நாட்டுத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம் "வெட்கக்கேடான" முறையில் தலையிடுவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் நேற்று(08.04.2026) கடுமையாகச் சாடியுள்ளார்.
புடாபெஸ்டில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேற்கத்திய நாகரிகத்தைப் பாதுகாப்பதில் டொனால்ட் ட்ரம்ப்பின் மிகச்சிறந்த கூட்டாளியாக ஓர்பனைப் புகழ்ந்து தள்ளினார்.
ஹங்கேரித் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் இதுவரை கண்டிராத மிக மோசமான வெளிநாட்டுத் தேர்தல் தலையீடு என்று அவர் விமர்சித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்
பிரதமர் ஓர்பன் மீதான வெறுப்பால், ஹங்கேரியின் பொருளாதாரத்தை அழிக்கவும், அந்நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தைப் பறிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முயல்வதாகவும், இதனைச் சுட்டிக்காட்டவே ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை இங்கு அனுப்பியுள்ளதாகவும் வேன்ஸ் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்துப் பேசிய வேன்ஸ், அமைதியை எட்டுவதற்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குத் தேவையானவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள விக்டர் ஓர்பன் பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், உக்ரைன் உளவு அமைப்புகள் அமெரிக்க மற்றும் ஹங்கேரியத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பியத் தலைவர்கள் கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை முற்றிலும் துண்டித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட எரிசக்தி பொருளாதாரத்தை மட்டும் நம்பியிருந்தது மிகப்பெரிய தவறு என்றும், அதுவே தற்போதைய மோதல்களுக்கு விதையாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோசமாகும் ஈரான் பொருளாதாரம்
ஈரான் உடனான போர் குறித்துப் பேசிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி, அமெரிக்கா தனது இராணுவ இலக்குகளைப் பெரும்பாலும் எட்டிவிட்டதாகக் கூறினார். இனி ஈரான் முன்னால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக, பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு சாதாரண நாடாக உலகளாவிய வர்த்தக அமைப்பில் ஈரான் இணைய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், இஸ்ரேல் மற்றும் அண்டை அரபு நாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், ஈரானின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமானதாகத் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.
ஓர்பன் மற்றும் வேன்ஸ் இடையிலான இந்தச் சந்திப்பு, சர்வதேச அரசியலில் ட்ரம்ப் ஆதரவு சக்திகளின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 14 நிமிடங்கள் முன்
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri