மீண்டும் சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்! பிறந்தநாளை கொண்டாடிய அப்போதைய இராணுவ அதிகாரி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(07.04.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று(07) அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், செம்மணியில் 600 பொதுமக்களை கொன்று புதைத்த கொடூர சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான கப்டன் லலித் ஹேவா (தற்போது ஓய்வு பெற்ற பிரிகேடியர்) தனது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்கின்றார் என்று முகப்புத்தக பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிசாந்தி கொலை வழக்கு தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே செம்மணி புதைகுழி தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட கப்டன் லலித் ஹேவா தற்போது வரை மிக சுதந்திரமாக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக எடுத்து வருகின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...
இன்னும் சில மணிநேரங்களே..! உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ட்ரம்பின் தாக்குதல் நேரம் - பெரும் பதற்றம்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam