நாட்டில் நிலவும் மோசமான வானிலை - சிறுவர்கள், முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சிறுவர்களின் நினைவாற்றல் மட்டுமல்லாமல் பெரியவர்களின் நினைவாற்றலும் குறையக்கூடும் என்று சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த நாட்களில் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்களில் வியர்வையாக உடலில் இருந்து நீரும் உப்பும் வெளியேறுவதால், ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
நினைவாற்றலை இழக்கும் அபாயம்
இந்த நிலையில் ஒருவர் தொடர்ந்து தண்ணீர் குடிக்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டால், அவர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணமாக, மூளை செயல்பாடு குறைதல், கற்றல் திறன் குறைதல், தலைவலி, வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
தோல் நோய்கள்
இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட, எலுமிச்சை, மாதுளை, சூப்கள், இளநீர், ஜீவனி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அதிகமாகக் குடிக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.