நீர்கொழும்பு சிறையின் மோதலால் முக்கிய துறைகள் முடங்கும் அபாயம் - சாகர காரியவசம் வலியுறுத்து

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sagara Kariyawasam Ministry of justice Sri lanka
By Rakesh Jul 07, 2026 04:51 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்களின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, "இன்று காலை நிலவரப்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் 20 கைதிகளும் 7 அதிகாரிகளும் என மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! சொல்லப்படாத தகவல்கள்

இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! சொல்லப்படாத தகவல்கள்

காட்டுமிராண்டித்தனமான நிலை

இது மிகவும் ஆபத்தான, பயங்கரமான ஒரு சூழ்நிலையாகும். ஊடகங்கள் வாயிலாகக் காணக்கிடைத்த காட்சிகள் மிகவும் அருவருப்பானவை. ஒரு நாடு என்ற ரீதியில், இந்தச் சம்பவமானது இலங்கையை சர்வதேச அரங்கில் ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

நீர்கொழும்பு சிறையின் மோதலால் முக்கிய துறைகள் முடங்கும் அபாயம் - சாகர காரியவசம் வலியுறுத்து | Negombo Priosn Justice Minister Sagara Kariyavasam

இவ்வாறானதொரு செய்தி உலகுக்குச் செல்லும்போது இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருவது பாதிக்கப்படுவதுடன், இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கூட பாரிய கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நீதித்துறை, சட்ட அமலாக்கக் கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலை முறைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள் அனைத்தையும் மூடிமறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமான உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடித்து, அவர்களைத் திருப்திப்படுத்தி, தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு கேவலமான முயற்சியிலேயே ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான அதிகாரியாகக் கருதப்பட்ட துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனியவை நீக்கியமை சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த போதிலும், நீதி அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன அந்த உத்தரவைப் புறந்தள்ளி, அரசுக்குத் தேவையானவாறு செயற்பட்டு வருகின்றார்.

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

ஆட்சியும் சீர்குலைவு 

அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் தனக்கான ஒரு பதவியைப் பெற்றுக்கொள்ளவே அவர் முயற்சிக்கின்றார். இதன் விளைவாக நாட்டின் நீதித்துறை முழுமையாக அழிவை நோக்கிச் சென்றுள்ளதுடன் சட்டத்தின் ஆட்சியும் முற்றாகச் சீர்குலைந்துள்ளது.

நீர்கொழும்பு சிறையின் மோதலால் முக்கிய துறைகள் முடங்கும் அபாயம் - சாகர காரியவசம் வலியுறுத்து | Negombo Priosn Justice Minister Sagara Kariyavasam

தங்களுக்குத் தேவையான தீர்ப்புகளைப் பெறுவதற்கும், தங்களுக்கு வேண்டிய நீதியரசர்களை நியமிப்பதற்கும், அவர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கும் இந்த அரசு எடுக்கும் முயற்சிகள் உலக அரங்கில் இலங்கையை 'சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடு' என முத்திரை குத்த வழிவகுக்கும்.

இந்த அரசு கடந்த காலங்களில் நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினை எழும்போது, அதைவிடப் பெரியதொரு பிரச்சினையை உருவாக்கி முந்தைய பிரச்சினையை மூடிமறைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.

மகா திறைசேரி கொள்ளை இடம்பெற்ற போதும், நபரொருவர் கழுத்தறுபட்டு இறந்த போதும் அவையெல்லாம் அவ்வாறே அமுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் நிலக்கரி ஊழல் வெளிவந்தபோது, எவ்வித காரணமுமின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதன் மூலம் அது நாட்டின் பிரதான தலைப்பாக மாற்றப்பட்டு, நிலக்கரி ஊழல் மூடிமறைக்கப்பட்டது.

இவ்வாறு நாட்டில் ஒரு பிரச்சினை வரும்போது அரசே திட்டமிட்டு அதைவிட பாரதூரமான வேறொரு பிரச்சினையை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பும் அற்பத்தனமான உத்தியையே ஆரம்பத்திலிருந்தே கையாண்டு வருகின்றது." என்றார்.

நீதி அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்..! வலியுறுத்தியுள்ள ஜி.எல்.பீரிஸ்

நீதி அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்..! வலியுறுத்தியுள்ள ஜி.எல்.பீரிஸ்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US