சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜபக்சர்கள்! அண்ணன் வீட்டில் ஒன்றுகூடிய தம்பிகள்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி விஜேவர்தன சந்திரா மாலினியின் மரண சடங்கில் ராஜபக்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சமகால அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்ச சகோதர்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் மூத்த சகோதரின் மனைவியின் மரண சடங்கில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மரண சடங்கு
அவர்களின் மற்றுமோரு சகோதரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபச்ச, அமெரிக்காவில் உள்ளமையினால் மரண சடங்கில் பங்கேற்கவில்லை என தெரிய வருகிறது.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவி விஜேவர்தன சந்திரா மாலினியின் பூதவுடல், ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமான மெதமுலன இல்லத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது.
இதன்போது மகிந்த மற்றும் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோர் மெதமுலன இல்லத்திற்கு வருகை தந்து பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மெதமுலன குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தென்னிலங்கை அரசியலில் ராஜபச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.