சிக்கலில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
புதிய இணைப்பு
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பாக நுகர்வோர் விவகார ஆணையத்திற்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது விலை குறைப்பு குறித்து சாதகமான பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், லாஃப்ஸ் எரிவாயுவின் விலைக் குறைப்பு குறித்து நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு தொடர்ந்து எரிவாயுவை வழங்க வேண்டும், இல்லையெனில் வெற்று எரிவாயு சிலிண்டருக்கான பணத்தை நுகர்வோருக்கு செலுத்த நேரிடும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு மற்றும் சந்தையில் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க தவறியது குறித்து விசாரிப்பதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (16) நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
எரிவாயு பற்றாக்குறை
இதன்போது அங்கு வரவழைக்கப்பட்ட அதிகாரிகளிடம், சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு பற்றாக்குறை நிலவும் சூழலில், 10ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்து.

அதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,775லிருந்தும், 5 கிலோ லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 732லிருந்தும் உயர்த்தப்பட்டது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு வந்தபோது, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நிறுவனத்தின் மஞ்சள் எரிவாயு சிலிண்டரை ஏந்தியபடி வந்ததால், அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், நுகர்வோர் விவகார ஆணையம், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் விலை திருத்தம் குறித்துப் பரிசீலிக்குமாறு தெரிவித்துள்ளது.
அதன்படி, நிறுவனத்தின் பணிப்பாளர் குழு இன்று கூடி இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்கும் என்று நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல் - உயர் எச்சரிக்கை நிலையில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்