வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்திற்கு சிலை
அமரர் சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய பணியை கௌரவிக்கும் முகமாக வல்வெட்டித்துறையில் சிலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் அதற்கான முழு நிதி உதவியையும் வழங்கத் தயாராக இருங்கிறேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராஜா தெரிவித்துள்ளார்.
இன்று(16.11.2026) வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்ற சிவாஜிலிங்கத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்குவது
மேலும் தெரிவிக்கையில் நான் சட்டத்தரணியானதும் சிவாஜியின் மாமனாராகிய சட்டத்தரணி மோதிலால்நேருவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரைச் சந்திக்கும் காலத்தில் அவரையும் சந்தித்து கதைத்தது உண்டு.

அமரர் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்காக கடுமையாக போராடி வந்துள்ளார்.
இதனை மதிக்கும் முகமாக அவரிற்கான சிலையை அமைப்பதற்கு நான் விருப்பம் கொண்டுள்ளேன்.
இதற்கு பொறுப்பானவர்கள் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதுடன் வல்வெட்டித்துறை நகர சபையும் இதற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.