இலங்கைக்கு வருகிறது FBI! இணைய மோசடி கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவின் Federal Bureau of Investigation (FBI) என்ற கூட்டாட்சி புலனாய்வு பணியக அதிகாரிகள் குழுவொன்று நவம்பர் 16 முதல் 22 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இலங்கையில் இயங்கும் ஒன்லைன் மோசடி மையங்கள் மற்றும் சர்வதேச குற்ற வலையமைப்புகள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளது.
ஒன்லைன் மோசடி
இலங்கை வரும் FBI இன் Charlotte அலுவலக அதிகாரிகள் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
அத்துடன்,டிஜிட்டல் தடயவியல், தொழில்நுட்ப விசாரணைகள் மற்றும் வழக்குகளை வலுப்படுத்துதல் தொடர்பான நிபுணத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதும், குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதும் இந்த ஒத்துழைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த நடவடிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆதரவுடன் FBI மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின் ஆரம்பமாக அமையும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.