அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்..

Russo-Ukrainian War United States of America Israel Iran
By T.thibaharan Nov 16, 2026 12:19 PM GMT
Report

பரஸ்பர நலன்கள் அடையப்படும் புள்ளியிலேயே உறவுகள் மலரும். அது குடும்ப உறவிலிருந்து, நாடு சார்ந்த உறவுகள் வரை நலன்களே உறவின் அளவையும், தன்னையும், தரத்தையும் தீர்மானிக்கின்றன.

இன்றைய ஜனநாயக உலகில் நாடகளின் அரசை வழிநடத்தும் அரசாங்கத்திடம் இருந்து தமக்கு என்ன நலன் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கையின் அடிப்படைலேயே மக்கள் தமது அரசாங்கத்தை தெரிவு செய்ய வாக்களிக்கின்றனர்.

அந்த அடிப்படையில் மத்திய கிழக்கிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் போர்பதட்டம் இஸ்லாமியர்களையும், உக்ரேனியர்களையும், யூதர்களினதும் அமைதி வாழ்க்கையை மட்டும் குலைத்து விடவில்லை முழு உலகத்தினது அன்றாட வாழ்வியலையும் குலைத்துவிட்டுள்ளது.

 இஸ்ரேலின் இன்றைய நிலை

யூத தேசமும் அமெரிக்க தேசமும் தம்மை எப்போதும் நலன்களில் அடிப்படையிலேயே புதுப்பித்துக் கொள்வர் என்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

முதலாவதாக இஸ்ரேலின் இன்றைய நிலையை நோக்கினால் கடந்த 27-10-2026 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடப்பு பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி 53ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

கடி ஐசன்கோட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களை பெற்றுள்ளன அதே சமயம் அரபு கட்சிகள்19 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. இஸ்ரேல் நாடாளுமன்றம் மொத்தமாக 120 ஆசனங்களை கொண்டுள்ளது.

அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. | The Outcome Of The Us Israel Elections Future

ஆகவே நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 ஆசனங்கள் தேவை. நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் அரபு கட்சிகளின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் தேர்தல் நெதன்யாகுவுக்கு மட்டுமல்ல இஸ்ரேலிய தலைவர்களுக்குமான முன்கூட்டிய அரசியல் எச்சரிக்கை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இஸ்ரேல் மக்கள் அனைவரும் போரை எதிர்க்கிறார்கள் என்றோ, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றோ இதை எடுத்துக்கொள்ளக்கூடாது.

இஸ்ரேல் மக்களின் விருப்பு என்பது வெறும் ஆட்சி மாற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல அது இஸ்ரேலிய மக்களின் பாதுகாப்பு, போர், பாலஸ்தீன விவகாரம், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைப் தொகுத்தும் பகுத்தும் பார்த்த யூதர்களின் நலன் சார்ந்த தீர்ப்பு என்றே பார்க்கப்பட வேண்டும்.

இஸ்ரேலிய மக்களின் இத்தகைய முடிவுக்கு பின்னே நெதன்யாகுவுக்குவின் போர், மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அவரது தலைமையை மக்கள் இன்னும் நம்புகிறார்களா? காசா போர் மற்றும் பணயக்கைதிகள் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையை மக்கள் ஏற்கிறார்களா? புதிய தலைமைக்கு மக்கள் வாய்ப்பளிக்க விரும்புகிறார்களா?

பாலஸ்தீனப் பிரச்சினை

பாலஸ்தீனப் பிரச்சினையினால் இஸ்ரேலின் எதிர்கால அரசியல் அணுகுமுறை மாறுமா? என்ற வகையிலான கேள்விகள் பல உள்ளன. ஆயினும் இப்போது நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் அவர் பதவியை இழந்துவிட்டார் என்று இப்போதே கூற முடியாது. இன்றைய நிலவரம் (12-11-2026) நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதனால் இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், அவர்கள் கடி ஐசன்கோட்டிடம் புதிய அரசு அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

ஐசன்கோட்டுக்கு அரசு அமைக்க டிசம்பர் 6ம் திகதி வரை அவகாசம் உள்ளது. ஆகவே நெதன்யாகு பதவியை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாகும்.

இதில் ஐசன்கோட் தோல்வியடைந்தால் நெதன்யாகுவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். இஸ்ரேல் அரசியலில் அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானகரமான நாட்களாக அமையப் போகிறது. இந்நிலையில் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் அரசியலை எடை போடுவதற்கு அமெரிக்காவில் 2026 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் நிலைமைகளையும் ஆராய்வது அவசியமானது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. | The Outcome Of The Us Israel Elections Future

இது ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு (Republicans) ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவுதான். அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. செனட்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் 2027 ஜனவரி முதல் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள காங்கிரஸுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் இயற்றுதல் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பு தேவை. அமைச்சரவை நியமனங்கள் செனட்டில் எதிர்ப்பு ஏற்படலாம். 2028 தேர்தல் குடியரசுக் கட்சியின் எதிர்காலத்திற்கு சவாலை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி இருக்கிறது.

அமெரிக்க இடைத்தேர்தல் பின்னடைவு என்பது ட்ரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. இந்த விடயத்தில் முக்கியமான அரசியலமைப்புச் சட்ட வேறுபாடு இருக்கிறது.

இடைக்காலத் தேர்தலில் தோல்வியடைந்ததால் அதிபர் பதவி தானாகப் பறிபோகாது. பிரதிநிதிகள் சபை பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் செனட்டில் பதவி நீக்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

அமெரிக்க ஜனாதிபதி

அத்தகைய ஒரு நிலைமையை தற்போது தோற்றுவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே ட்ரம்பின் பதவிக்காலம் 2029 ஜனவரியில் முடிவடையும் வரை அவர் அமெரிக்க ஜனாதிபதி என்று கழுகாசனத்தில் இருந்து இறங்க மாட்டார்.

இங்கே ட்ரம்புக்கு எதிராக மக்கள் வாக்களித்ததற்கான காரணங்கள் என்ன? இதனை அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தேர்தல் ஆய்வுகளின்படி உணவுப் பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு.

மற்றும் ஈரானுடனான போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமை. ட்ரம்பின் இறக்குமதி வரிக் கொள்கைகள் குறித்த அதிருப்தி. ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி என கூறுகின்றன.

அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. | The Outcome Of The Us Israel Elections Future

அதிலும் குறிப்பாக 2026 இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ராய்ட்டர்ஸ்–இப்சோஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பு 2026 நவம்பர் 6 முதல் 9 வரை அமெரிக்காவின் தேசிய அளவிலான பிரதிநிதித்துவ மாதிரியைப் பயன்படுத்தி இணையவழி ஊடான கருத்துக்கணிப்பு 1,705 பேர்களிடையே நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நவம்பர் 9 அன்று வெளியிடப்பட்டன.

ராய்ட்டர்ஸ் செய்தியில் 10 நவம்பர் 2026 அன்று வெளியானது. இதன் முடிவுகள் 71% அமெரிக்கர்கள் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் சட்டம் இயற்ற வேண்டும் என விரும்பினர்.

93% ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். 51% குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள். 62% ட்ரம்பின் இறக்குமதி வரிகளை ரத்து செய்வதற்கான முயற்சியை ஆதரித்தனர். ஆகவே இடைத்தேர்தலுக்குப் பின்னரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க மக்களின் விருப்பம் வலுவாக இருக்கிறது.

ட்ரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியினரில்கூட 51% பேர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை ஆதரிக்கிறார்கள்.

ஆகவே 71% மக்கள் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்கான ஆதரவு மட்டுமே.

அதேநேரம் சுமார் 70% வாக்காளர்கள் அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையிலும் விவாதங்களை அதிகரிக்கலாம். இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு குறித்த விவாதம். ஈரானுடனான போர் மற்றும் அணுசக்திப் பிரச்சினை.

உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்க உதவி. நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவு. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகள் என்பவற்றில் டிரம்பின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வரையறுக்கப்படுவதோடு காங்கிரஸின் கண்காணிப்பும் அரசியல் எதிர்ப்பும் அதிகரிக்கும்.

எனவே அமெரிக்கத் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் ஈரான், உக்ரைன் போர்கள் மற்றும் உலக அரசியல் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க-இஸ்ரேல் தேர்தல் முடிவுகளின் சர்வதேச அரசியல் தாக்கத்தை பலவேறு கோணங்களில் புரிந்துகொள்ளலாம்.

இஸ்ரேலில் நெதன்யாகுவின் அரசுக்கு என்ன விளைவு ஏற்படுமென்றால் அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கையில் விவாதங்கள் அதிகரிக்கலாம்.

இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்களின் கோரிக்கைகள் வலுப்பெறலாம்.

காசா போர் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு அதிகரிக்கலாம். நெதன்யாகு அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு நிபந்தனைகளுடன் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவாகலாம்.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம்: ஜனநாயகக் கட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பவர்களும் உள்ளனர், உதவிகளைக் குறைக்க விரும்புபவர்களும் உள்ளனர்.

எனவே அமெரிக்காவின் இஸ்ர தரவு உடனடியாக முடிவுக்கு வரும் என்று கூற முடியாது. நெதன்யாகு இனி அமெரிக்காவின் அரசியல் ஆதரவைப் பெறுவதில் அதிகமான உள்நாட்டு எதிர்ப்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கலாம்.

தற்போதைய அரசியல் சூழலில் ஈரான் போர் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுடன் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க இஸ்ரேல் தேர்தல்களின் முடிவு

ராய்ட்டர்ஸ் நவம்பர் 12 செய்தியின்படி, ஈரானுடனான எட்டு மாதப் போர் அமெரிக்க வாக்காளர்களின் அதிருப்திக்கும் குடியரசுக் கட்சியின் தேர்தல் பின்னடைவுக்கும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆயினும் டிரம்ப் போர் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதனால் (1) ஈரான் போருக்கான கூடுதல் நிதியை காங்கிரஸ் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். (2) போரைத் தொடங்கியதற்கான சட்ட அடிப்படை, செலவுகள், ராணுவ நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் அதிகரிக்கலாம்.(3) போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தூதரக முயற்சிகளுக்கு அரசியல் அழுத்தம் உருவாகலாம். ஆனாலும் காங்கிரஸால் தனியாக அதிபரின் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த முடியாது.

அதிபரின் அரசியலமைப்புச் சட்ட அதிகாரமும் முக்கியமானது. உக்ரைன் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி சில புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவ உதவியைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸில் வலுப்பெறலாம். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது உக்ரைனின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் உருவாகலாம்.

ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்த முயற்சிகள் வரலாம். ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அதிகாரம் தொடர்ந்து இருக்கும். எனவே உக்ரைனுக்கான அமெரிக்கக் கொள்கை முழு அளவில் மாற்றம் அடையாது சில கட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. | The Outcome Of The Us Israel Elections Future

உலகின் இரண்டு முக்கிய சக்தி வாய்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியலில் மக்கள் தமது நலன்களை கருத்தில் கொண்டு தேர்தல்களை எதிர்கொண்டு தமக்கான நலன் தயக்க வல்ல அரசாங்கங்களை தெரிவு செய்க முனைகிறார்கள் என்பது புலனாகிறது. பரஸ்பர நலன்கள் சந்திக்கும் சந்திப்புள்ளியிலேயே உறவுகள் மலரும். பரஸ்பர நலன்கள் இல்லையேல் உறவுகள் இல்லை.

இங்கே அமெரிக்க மக்களின் நலன்களும் அமெரிக்க தேசத்தின் நலன்களும் எவ்வாறோ அவ்வாறே இஸ்ரேலிய மக்களினதும், தேசத்தினது நலன்களுமே அவரவர் அரசாங்கங்களை தெரிவு செய்வதற்கான நிர்ப்பந்தங்களையும், நியதிகளையும் தோற்றுவிக்கின்றன.

நலன்களின் நிபந்தனைக்கு உட்பட்டே மக்கள் தங்களின் தெரிவை தேர்தல் வாக்களிப்பின் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இஸ்ரேல் தேர்தல்களின் முடிவுகளின் பின்னால் எதிர்காலத்தில் சர்வதேச அரசியலும், புவிசார் அரசியலும், புவிசார் அரசியல் யுத்தங்களின் போக்குகள் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போம். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 16 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US