ஞானசார தேரருக்காக மீண்டும் குரல் கொடுக்கும் பௌத்த பிக்குகள்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்காக, சில பௌத்த பிக்குகள் மீண்டும் குரல் கொடுத்துள்ளனர்.
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை கிரமமாக அணிவிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாகிதர்ம மாஹா சங்கசபையின் மாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்ட விவகாரம் அண்மையில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் ஞானசார தேரருக்கு காவி உடையை மீள அணிவித்தல் தொடர்பில் மாநாயக்க தேரரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சில பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி பௌத்த பிக்குகள் சிலர், சிறைச்சாலைகள் திணைக்கள தலைமையகத்திற:கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.