கஸ்ஸப தேரரின் பரிதாப நிலை! தப்பியோடும் ராஜபக்சர்கள் : பின்னணி குறித்து வெளியான தகவல்
சமகால அரசாங்கத்திற்கு எதிராக, ராஜபக்ச தரப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டாலும், அது ஜனாதிபதி அநுரவின் சாமர்த்தியம் காரணமாக தோல்வி கண்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் மீண்டுமொரு இனவாத செயற்பாட்டினை முன்னெடுக்க ராஜபக்ச தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
அதற்கமைய பௌத்த மதத்திற்கு ஆபத்து உள்ளதாக காண்பிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தப்பியோடும் ராஜபக்சர்கள்
கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக தீவிர இனவாத சிந்தனையுடன் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இதன் பின்னணியில் முக்கிய நபராக செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கஸ்ஸப தேரர் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான சரத் வீரசேகர உள்ளிட்ட சிலர் தற்போது கடும் மௌனம் காத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரைக் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று இரகசியப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டமை தொடர்பான காணொளிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இவ்வாறான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ராஜபக்சர்களின் தோல்வி
இந்த நிலையில், அங்கு அவர் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை அச்சுறுத்தி ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் வெளியானதை தொடர்ந்து, சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு மௌனமாகியுள்ளனர்.
பலாங்கொட கஸ்ஸப தேரரின் போதைப்பொருள் பாவனை மற்றும் மனநலப் பாதிப்புகள் தொடர்பில் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னர், அவருக்குப் பின்னால் இருந்த அனைத்து அரசியல்வாதிகளும் தற்போது தேரரை கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் தேரருக்கு பாதிப்பு என்றால், அங்கு முதல் ஆளாக இருப்பேன் என சூளுரைத்த சரத் வீரசேகர, மௌனம் காத்து வருகின்றமை, ராஜபக்சர்களின் சதி முயற்சி பாரியளவில் தோல்வி அடைந்தமையை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய அநுராதபுர மோதல் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின