கைவிலங்குடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கஸ்ஸப தேரர்
பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த தேரரை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.அதற்கமையவே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பலாங்கொடை கஸ்ஸப தேரர்
அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, நேற்று (15) மாலை அவர் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேரர் தொடர்பான மற்றுமொரு முக்கிய வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.