கந்தசுவாமி ஆலய சூரன் போரில் பொலிஸாரால் பதற்றம்! எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கை
வவுனியா - கந்தசுவாமி ஆலய சூரன் போர் நிகழ்வில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று(15.11.2026) சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் ஆலய சூழலில் ஒன்று கூடியிருந்தனர்.
பொலிசாரால் கண்டி வீதியின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டது. அதே வீதியின் மற்றைய பகுதியால் இருவழி போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.
போக்குவரத்து நெறிச்சலால் ஏற்பட்ட குழப்பம்
எனினும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றமையால் அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வீதியை மூடி மாற்று வீதியால் வாகனங்களை அனுமதிக்குமாறு பொலிசாரிடம் பொதுமக்களும் ஆலய தரப்பும் கேட்டிருந்தனர்.

எனினும் பொலிசார் அந்த வீதியால் தொடர்ச்சியாக வாகனங்களை செல்ல அனுமதித்து வந்தனர். இதனால் வாகன நெருக்கடி அதிகரித்த நிலையில் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.
சற்று நேரத்தின் பின்னர் குறித்த வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையூடாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
கடந்த முறை இடம்பெற்ற சூரன்போர் நிகழ்வில் குறித்த கண்டி வீதி முற்றாக மூடப்பட்டு மாற்று பாதையூடாகவே போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS