தென்னிலங்கையில் 15 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி
மாத்தறை, பெரலபனாத்தர பிரதேசத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி 17 வயதுடைய இளைஞனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள 17 வயதுடைய மாணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவி, அதே பாடசாலையில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்ற மாணவன் ஒருவருடன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.
காதலன் தப்பியோட்டம்
அதன் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.
எனினும், இருவருக்கும் இடையிலான தொடர்பு தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியைக் கர்ப்பமாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊருபொக்க பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.