அமெரிக்கா - ஈரான் போர் முடிவு: புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்ட பாகிஸ்தான் தீவிர முயற்சி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் இரு நாடுகளும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆக்ஸியோஸ் ஊடகம் வெளியிட்ட இந்தச் செய்தியை ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
"நாங்கள் இதனை மிக விரைவில் முடிப்போம், ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்துவிட்டோம்" என்று அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் தணிந்து, ஹோர்முஸ் நீரிணையில் முடங்கிக் கிடக்கும் சர்வதேச வர்த்தகம் மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுக்கும்.
இந்தச் செய்தியின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு வளைகுடாப் பகுதியில் அமைதி திரும்புவதற்கான வலுவான வாய்ப்பாக இந்த ஒரு பக்க ஆவண ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் இடையே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan