கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளம் பேராசிரியர் பதவி விலகல்
பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது பேராசிரியரான ஜேசன் ஆர்டே , தன் மீதான கல்வித்துறைசார் முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளை அடுத்து பதவி விலகியுள்ளார்.
அவரது கல்வித் தகுதிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் "புதிய தகவல்கள்" கிடைத்துள்ளதாகக் கூறி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தேவையற்ற விமர்சனங்கள்
கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த (Ph.D.) பட்ட ஆய்வேட்டில், பிற ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அத்துடன், தொண்டு நிறுவனங்களுக்காக மரதன் ஓட்டங்கள் மூலம் 5.5 மில்லியன் பவுண்டுகளை நிதியாகத் திரட்டியதாக அவர் கூறிய கூற்றுகள் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

ஆட்டிசம் உள்ளிட்ட கற்றல் குறைபாடுகளை வென்று பேராசிரியர் நிலையை அடைந்த ஜேசன் ஆர்டே, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார்.
எனினும், ஊடகங்கள் மற்றும் வெளித்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே தாம் இந்த பதவியிலிருந்து விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri