உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு..

CID - Sri Lanka Police Sri Lanka Police Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Kanthan Sep 23, 2026 10:28 AM GMT
Report

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 24 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இச் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வலையொழி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரித்த கருத்துக்கள்

16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மன்னிப்பு கோர மாட்டேன் - நவுஃபர் மௌலவியின் அதிரடி பதில்

16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மன்னிப்பு கோர மாட்டேன் - நவுஃபர் மௌலவியின் அதிரடி பதில்

அநீதியை அநியாயமாக மறைத்தல்

இந்த சம்பவம் தொடர்பில் உண்மையைத் தெரிந்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை இங்கு மன்னிப்பதும் மற்றவர்களைக் கருணையோடு நடத்துவதும் வேறு விடயம். ஆனால் அநீதியையும் அநியாயத்தையும் மறைக்கவோ உண்மையை மறைக்கவோ அனுமதிக்க முடியாது.

யார் இதைச் செய்தார்கள்? இது எப்படி நடந்தது? என்பதைத் தெரிந்து கொள்ளும் நியாயமான உரிமை அனைவருக்கும் இருக்கிறது,  குறிப்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது.

அப்படியானால் பாதிக்கப்பட்ட தரப்பு என்பது கட்டுவாபிட்டிய மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் உயிர்களை இழந்தவர்கள் ஊனமுற்றவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே தான்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு.. | Easter Attack In Sri Lanka Malkam Ranjith

ஏனெனில் அந்த நேரத்தில் இந்த அப்பாவி மக்களின் உயிர்களைப் பற்றி நம் அனைவருக்கும் பெரும் சோகம் ஏற்பட்டது. அந்த வலி சகோதரத்துவத்துடன் நம் அனைவருக்கும் உணரக்கூடிய ஒன்று.

எனவே இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் என்ன இருந்தது? யார் இதைச் செய்தார்கள்? என்பதைத் தெரிந்து கொள்வது நமது உரிமை. ஆனால் மன்னிப்பது நமது பொறுப்பு நமது கடமை.

பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு நோய் வந்தோ அல்லது ஏதேனும் நியாயமான காரணத்தினால் இறந்தவர்கள் இல்லை. திடீரென்று காலையில் தேவாலயத்திற்குச் சென்றார்கள் திரும்பி வரவில்லை.

அல்லது ஊனமுற்றவர்களாகி வாழ்நாள் முழுவதும் துயரப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். படுக்கையிலோ சக்கர நாற்காலியிலோ முடங்கிப்போனார்கள். எனவே அவர்களின் மனதிற்குள் இந்த வலி இருக்கிறது.

உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை

யார் நமக்கு இதைச் செய்தார்கள்? ஏன் நமக்கு இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்கள்? அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது அந்த உரிமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஆம் முழுச் சமூகத்திற்குமே இருக்கிறது. இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்துவிட்டு நாம் எப்படிச் சும்மா இருப்பது? இதை ஆராய வேண்டும் உண்மையைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகு யாராவது ஒருவர் தனது தவறை ஒப்புக் கொண்டால் மன்னிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

உதாரணமாக நெல்சன் மண்டேலாவை சிறையில் அடைத்து அவரைச் சித்திரவதை செய்த ஒரு பொலிஸ் அதிகாரி அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். அப்போது அவர் மன்னித்தார். அதுதான் மன்னிப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு.. | Easter Attack In Sri Lanka Malkam Ranjith

'ஆம் என் கையால் இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்னை யார் இயக்கியது என்று எனக்கு சரியாகத் தெரியாது ஆனால் நான் இப்படி ஒரு தவறு செய்துவிட்டேன் அது குறித்து நான் வருந்துகிறேன்' என்று தனது தவற்றை ஒப்புக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.

எனவே இது தீர்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சினை. ஆனால் இதை அரசியல்மயமாக்கி கட்சி அரசியல் உள்ளே வந்து இதை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒரு கலவரமாக மாற்றி எல்லாரும் நாடகம் ஆடுகிறார்கள்.

நமக்கு இவை எதுவும் தேவையில்லை. நமக்குத் தேவைப்பட்டது, யார் இந்த அழிவைச் செய்தது? 273 பேரின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்தது யார்? அதைச் சொல்லுங்கள்.

அதை ஒப்புக்கொள்ளுங்கள் “ஆம் நாங்கள் ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டோம் நாங்கள் தவறு செய்துவிட்டோம்” என்று ஒப்புக்கொள்ளுங்கள். அப்போது எங்களால் மன்னிக்க முடியும். மன்னிக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் ஆண்டவர் நமக்குச் சொன்னது அதைத்தான் “மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்களின் மீதமுள்ள சூத்திரதாரிகள்.. அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்களின் மீதமுள்ள சூத்திரதாரிகள்.. அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

45 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி மாற்றம்! புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில்..

45 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி மாற்றம்! புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வர்த்தமானியில்..

YOU MAY LIKE THIS.. 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US