போர்நிறுத்தத்தில் அமெரிக்க தலையீடு: பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாடு
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர்நிறுத்ததை கொண்டுவர அமெரிக்காவின் தலையீடு அவசியம் என பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் கூட்டுப் பாதுகாப்பிற்கான வழிமுறையே இது என அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐரோப்பியத் தலைவர்கள் பாரிஸில் நடாத்திய அவசர சந்திப்பின் போதே ஸ்டார்மர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
இதேவேளை, பாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனின் தலையீடு இல்லாமல் உக்ரைன் சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், எந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஐரோப்பாவின் பங்கு இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 16 மணி நேரம் முன்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
