ஐ.எஸ் முகாமிலிருந்து திரும்ப முயன்ற குடிமகனுக்கு அவுஸ்திரேலியா தடை
சிரியாவில் உள்ள ஐ.எஸ் (IS) தீவிரவாத முகாமிலிருந்து நாடு திரும்ப முயன்ற தனது நாட்டு குடிமகன் ஒருவருக்கு, அவுஸ்திரேலிய அரசு இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
சிரியாவின் அல்-ரோஜ் (al-Roj) முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட 34 அவுஸ்திரேலியப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குழுவில் ஒருவராக இருந்த இவர், பாதுகாப்பு முகவரங்களின் ஆலோசனையின் பேரில் நாட்டுக்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்த குழுவில் உள்ள மற்ற 33 பேர் மீது தடை விதிக்க சட்டரீதியான காரணங்கள் போதுமானதாக இல்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
தடை
இது குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தீவிரவாத சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அரசு எந்தவிதமான உதவிகளையும் வழங்காது.
"தவறு செய்தவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும்" என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

இருப்பினும், குடிமக்களின் கடவுச்சீட்டு மற்றும் சட்ட உரிமைகளை அரசு மீறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிரிய முகாம்களில் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுப் பிரஜைகளைத் திருப்பி அழைப்பதில் அவுஸ்திரேலியா மட்டுமல்லாது பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் இதே போன்ற கடுமையான நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகின்றன.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri