கொழும்பில் ஐவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிக்கு சிக்கல்
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் அடையாளம்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலானது, கடந்த சனிக்கிழமை இரவு (14) இடம்பெற்றிருந்த நிலையில் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி - வெள்ளிமலை பகுதியை சேர்ந்த என தெரிய வந்துள்ளது.
சிகை அலங்கார நிலையமொன்றை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனி விசாரணை
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றபோது, பொலிஸ் சார்ஜென்ட் கையில் துப்பாக்கியுடன் ஜீப்பில் இருந்து இறங்கி ஜீப்பின் கதவில் ஒளிந்து கொண்டதும், T-56 ரக துப்பாக்கியை ஏந்திய மற்றுமொரு கான்ஸ்டபிள் சுட முயற்சிப்பதும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், துப்பாக்கிகளுடன் ஸ்கூட்டரில் தப்பிச்சென்றபோது, அவர்களை நிறுத்தாமலோ அல்லது கைது செய்யாமலோ இருந்ததற்கான காரணம், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடனான தொடர்பு காரணமாகவா என்பதைத் தீர்மானிக்க தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan