அணுசக்தி கடத்தலை தடுக்க இலங்கையுடன் கைகோர்க்கும் அமெரிக்கா
அணு மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமும் இலங்கை கடற்படையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இலங்கையில் உள்ள பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் ஊடாக வழிநடத்தப்பட்ட இந்த உடன்படிக்கைக்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபை, இலங்கை அணுசக்தி சபை, வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியன இந்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை முழுமையாக ஆராய்ந்துள்ளன.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேலும், சட்டமா அதிபரும் ஒப்பந்தத்தின் சட்ட அம்சங்களை அங்கீகரித்து தேவையான அனுமதியை வழங்கியுள்ளார்.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |