ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் நாட்டுக்கு பாதகம் ஏற்படும்: ஜனாதிபதி சட்டத்தரணி
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எவ்வாறாயினும், ஜனநாயக கட்டமைப்பிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு அதிகார பரிமாற்றம், ஜனநாயக ரீதியாக நடைபெற வேண்டும்.
ஜனநாயக ரீதியான அதிகாரம்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைப்பார் என பிரதமர் கூறியுள்ள கருத்து தொடர்பிலேயே சட்டத்தரணி உப்புல்குமார இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த நேரத்திலும், நாடாளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பின் அடிப்படையில், ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்த குமாரப்பெரும, இந்த தருணத்தில் அவ்வாறு செய்தால் அது மிகவும் நேர்மையற்ற செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். எனினும் தற்போதைய சூழ்நிலையில், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி உப்புல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |