அநுர அரசின் அதிரடியால் கதி கலங்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள்!
இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை பொலிஸார் அண்மையில் கோரியிருந்த நிலையில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசியல்வாதிகளின் மட்டுமன்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்களுக்கும் சிக்கல் நிலை ஏற்பட்டுளளது.
ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இவ்வாறான நிலையில் பொலிஸார் விடுத்த அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முறையான வழிகாட்டல்கள் இன்றி குறித்த பொலிஸ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரமான பரிசோதனைச் சபை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளுக்கும் பொலிஸாரின் இத்தகைய அறிவித்தலுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், அண்மைக்காலங்களில் சொத்துக்களைச் கொண்டவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கறுப்புப் பொருளாதாரம்
கறுப்புப் பொருளாதாரம் குறிப்பாக, கடந்த 3 தசாப்தங்களாக இந்நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் பாரிய அளவில் பரவியுள்ளது.

அதனை அடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பொலிஸார் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை News Lankasri
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri