கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Rajapaksa Family CCD - Colombo Crime Division
By Kanthan Jul 24, 2026 08:25 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.

அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு - சஜித்துடன் முரண்பட்டு கோபமாக வெளியேறிய நாமல்

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு - சஜித்துடன் முரண்பட்டு கோபமாக வெளியேறிய நாமல்

கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்

இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது.

தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்! | Gotabaya Rajapaksa Sugeeshwara Bandara

அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.

மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.

மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்! | Gotabaya Rajapaksa Sugeeshwara Bandara

எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன.

இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.

அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதிய குழு!

அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதிய குழு!

தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US