அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதிய குழு!
நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் (23) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இடம்பெற்ற கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1.1 மில்லியன் வழக்குகள்..
இதன்போது, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.

இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்.
இது பிரித்தானியாவில் எப்படி நடந்தது, மற்ற நாடுகளில் எப்படி நடந்தது, நமக்கு ஒரு டிஜிட்டல் முறை தேவையா, அதை இன்றோ நாளையோ உடனடியாகச் செய்தால், திங்கட்கிழமை ஒப்படைக்கலாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam