ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலதிக இராணுவப்பிரிவொன்று ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று (06) முதல் பொது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
இராணுவத்தளபதியிடம் கோரிக்கை
அவ்வாறான பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெலவத்தை அலுவலகத்தில் இருந்து இராணுவத்தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 1000 இராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த இராணுவத்தளபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த கூட்டங்களுக்கான அரச வசதிகள் வழங்குவது தொடர்பாக எந்தவொரு எழுத்துப்பூர்வ பரிவர்த்தனையும் செய்யப்படக்கூடாது என்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களும் அனுப்பப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய தடை
இந்த கூட்டங்களின் போது, ஜேவிபி அமைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவரும் மேடைக்கு அருகிலுள்ள பாதுகாப்பு வளையத்திற்கு அருகில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பேருவளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஜனாதிபதி வந்து மேடையை விட்டுச்செல்லும் வரை எந்த படகும் பேருவளை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின் போது அப்போதைய ஜனாதிபதிகள் கூட இத்தகைய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam