கப்பலில் இந்தியா சென்ற 13 பேருக்கு நேர்ந்த கதி
காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் 13 பேர் மீது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம்
இதனையடுத்து, குறித்த 13 பேரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, குறித்த 13 பேரும் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸார், குறித்த 13 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.